விண்கற்கள் கண்டறிந்த கல்லுாரி மாணவர்கள்
கோவை: எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள், சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்வில் ஈடுபட்டு, சாதனை படைத்துள்ளனர்.சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பு மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா சார்பில், விண்கற்கள் கண்டறிந்து அதை வகைப்படுத்தப்பட்டு வருகிறது. பான் ஸ்டார்ஸ்-01 என்ற தொலைநோக்கி மூலம், இரவு நேரங்களில் வான்வெளி படங்கள் எடுக்கப்படுகிறது. இதை, பிரத்யேக மென்பொருள் கொண்டு, விண்கற்களை மட்டும் கண்டறிய, ஆய்வு நடக்கிறது. இதில், எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரி இயற்பியல் துறை மாணவிகள் பங்கேற்றனர். ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் நிறுவனர் சுரேந்தர் பொன்னழகர், உதவி அறிவியலர் கிருத்திகா கிருஷ்ணன் ஆகியோர், மாணவிகளை வழிநடத்தினர்.ஆய்வில் ஈடுபட்ட மாணவிகள் சாஜிதா, தாரணி, பவதாரணி, காவ்யா, தனுஷ்யா, சுகன்யா ஆகியோருக்கு, கல்லுாரி முதல்வர் சுப்பிரமணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். துறை தலைவர் லெனின்பாரதி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.