உள்ளூர் செய்திகள்

மீன்வள பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்

சென்னை: நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலையின் துணைவேந்தராக பெலிக்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.இவர் ஏற்கனவே அப்பல்கலை பதிவாளர் மற்றும் பொறுப்பு துணைவேந்தராக பணியாற்றி வந்தார். தற்போது அவரை துணைவேந்தராக, கவர்னர் ரவி நியமித்துள்ளார். அதற்கான ஆணையை, நேற்று அவரிடம் கவர்னர்வழங்கினார். துணைவேந்தர் பொறுப்பில், பெலிக்ஸ் மூன்று ஆண்டுகள் இருப்பார்.இவர் கல்வித்துறையில், 32 ஆண்டுகள் அனுபவம் உடையவர். பேராசிரியராக, 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு கல்வி கருத்தரங்கில் பங்கேற்க சென்றுள்ளார். பல புத்தகங்களை எழுதி உள்ளதுடன், ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். சிறந்த விஞ்ஞானிக்கான விருதும் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்