கிளை நுாலகத்தில் அங்கன்வாடி மையம்
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சியில் அரசு பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது.இந்த அங்கன்வாடி மையத்தில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. இந்த அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து மழைநீர் உள்ளே புகுந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.இதனால் தற்போது அங்கன்வாடி மையம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கிளை நுாலகத்தில் இயங்கி வருகிறது. இதனால் நுாலக வாசகர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து புதிய அங்கன்வாடி மையம் கட்ட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.