டி.டி.டி., சார்பில் பகவத்கீதை போட்டிகள்
சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஹிந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் ஸ்ரீமத் பகவத் கீதை ஜெயந்தி - 2023 விழா நடக்கிறது.சென்னை, தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் டேக் ஆடிட்டோரியத்தில், இன்று காலை 9:00 மணிக்கு கர்ம யோகம் - 3வது அத்தியாயம் தொடர்பாக, பள்ளி மாணவ- - மாணவியருக்கு இரண்டு பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 18 அத்தியாயங்கள் கொண்ட போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பேர் வீதம் உடனடியாக பரிசுகள் வழங்கப்படும். இதைத் தொடர்ந்து, கீதா ஜெயந்தி சமய சொற்பொழிவை ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலர் சுவாமி யதுநாதனந்தா வழங்குகிறார்.