உள்ளூர் செய்திகள்

நாட்டுப்புறக்கலை பயிற்றுனர் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: பகுதி நேர நாட்டுப்புறக் கலை பயிற்றுனர்கள் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு இசைக் கல்லுாரிகள், கவின் கலைக் கல்லுாரிகள், கட்டடம் மற்றும் சிற்ப கலைக் கல்லுாரி, மாவட்ட அரசு இசைப் பள்ளிகள், தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் என, 25 இடங்களில், பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்சி மையங்கள் உள்ளன.இவற்றில், நான்கு வகையான நாட்டுப்புறக் கலைகளில், ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக, வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில், மாலை பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன. 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மாதம் 7,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். தகுதியும் திறமையும், 25 ஆண்டுகள் பணி அனுபவமும் உள்ளவர்கள் அல்லது தகுதியும் திறமையும் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள், ஜன., 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தை, www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்