எண்ணும் எழுத்தும் பயிற்சி ரத்து
சென்னை: தொடர் மழை காரணமாக, ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்கக இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தொடர் மழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில், விடுப்பு வழங்கப்பட்டதால், பள்ளி வேலை நாட்கள் குறைவாக உள்ளன. இதை கருத்தில் வைத்து, எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான, நேரடி பயிற்சி தவிர்க்கப்பட்டுள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள, ஆசிரியர் கையேடுகளின் வழிகாட்டுதலோடு, மூன்றாம் பருவத்திற்கான பாடங்களை, வகுப்பறையில் செயல்படுத்தவும்.ஆசிரியர் கையேடில் உள்ள, கியூ ஆர் கோடில் பதிவேற்றம் செய்யப்படும், வீடியோக்கள், வகுப்பறை செயல்பாட்டு வீடியோக்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, எண்ணும் எழுத்தும் வகுப்பறையை சிறப்பாகக் கையாள, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தவும்.மூன்றாம் பருவப் பயிற்சி சார்ந்த பாடக் கருத்துக்கள், மின் பாடப் பொருளாக, கல்வி டிவி மற்றும் &'யு டியூப்&' சேனலில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அவற்றையும் பயன்படுத்தி, ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறையை சிறப்பாக செயல்படுத்த, அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழியே, அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.