உள்ளூர் செய்திகள்

மாணவர்களை மிரட்டும் மாடுகள் பிடிக்கப்படுமா?

மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், கண்ணகி தெருவில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.அவர்கள் பள்ளிக்கு செல்ல பிரதான வழித்தடமாக பொன்னியம்மன் கோவில் தெருவும், அருள்ஜோதி சாலையும் விளங்குகிறது. இந்நிலையில், அருள்ஜோதி சாலையில் குப்பை தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதில், சேகரமாகும் குப்பை உரிய நேரத்தில் எடுப்பதில்லை.உணவு தேடி அலையும் மாடுகள் மற்றும் நாய்கள், இந்த குப்பை தொட்டிகளில் மேய்கின்றன. வாகனங்களின், ஹாரன் ஒலியால் திடீரென மிரண்டு சாலையில் ஓடும்போது, அவ்வழியே செல்லும் மாணவர்களை முட்டுகின்றன. மேலும், தெரு நாய்களும் வாகனங்களை துரத்துவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.உயிர்பலி ஏற்படும் முன், பள்ளியின் சுற்று வட்டார பகுதிகளில் திரியும் மாடுகளை சிறைபிடிக்க வேண்டும். மாடுகள் வருவதற்கு காரணமாக இருக்கும் குப்பை தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்