உள்ளூர் செய்திகள்

சென்னை புத்தொழில் அலுவலகம் திறப்பு

சென்னை: சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன வளாகத்தில், ஸ்டார்ட் அப் டி.என் எனப்படும், தமிழக புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின், சென்னை புத்தொழில் மைய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. திட்ட செலவு, 5.64 கோடி ரூபாய்.இதை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். இந்த அலுவலகத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சி வழங்க பயிற்சி அரங்கம், கூட்ட அரங்கம், சேவை மையம், சந்திப்பு அறை உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுஉள்ளன.அலுவலக துவக்க விழாவில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், செயலர் அர்ச்சனா பட்நாயக், ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்