உள்ளூர் செய்திகள்

பல்கலையில் பெண்கள் மேம்பாட்டு பயிலரங்கம்

கொடைக்கானல்: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம்; தமிழ்நாடு என்.எஸ்.எஸ்., திட்டம் ஆகியன சார்பில், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பெண்கள் பல்கலையில், 3 நாள் பெண்கள் மேம்பாட்டு பயிலரங்கம் நடக்கிறது. அனைத்து பல்கலையில் இருந்து, 120 என்.எஸ்.எஸ்., திட்ட மாணவ, மாணவியர் பயிலரங்கில் பங்கேற்றுள்ளனர்.இதில், பாரதியார் பல்கலையில் இருந்து, தேர்வான 8 பேரில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., அலகு - 2 மாணவி, ஜெயலட்சுமியும் ஒருவர். கொடைக்கானலுக்கு செல்லும் மாணவியை சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்