அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா, முதல்வர் அன்பரசி தலைமையில் நடந்தது. சேலம் சாரதா கல்லுாரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற, ஆங்கிலத்துறை தலைவர் கஸ்துாரிபாய், சிறப்பாளராக பங்கேற்று, ஒழுக்கமே மனித வாழ்க்கையின் உயிர் நாடி, தமிழன் வகுத்துள்ள, ஒன்பது தானியம், எட்டு வகை நிலைப்பாடு, ஏழு வகை ஸ்வரங்கள், ஆறு வகை சுவை, ஐந்து வகை நிலம், நான்கு வகை காற்று, மூன்று வகை தமிழ், இரண்டு வகை வாழ்க்கை நிலை, ஒன்று மட்டுமே ஒழுக்கம் என்று வைத்துள்ளான். ஆகவே, அனைவரும் ஒழுக்கத்தை கடைப்பிடித்தாலே அனைத்து வெற்றிகளையும் அடைந்து விடலாம் என்றார்,இதையடுத்து இளங்கலை, முதுகலை பாட பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற, 420 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.