உள்ளூர் செய்திகள்

கலைத்திருவிழா போட்டி: மாணவர்கள் அசத்தல்

பொள்ளாச்சி: கல்லுாரிகள் இடையேயான கலைத் திருவிழா போட்டி, பொள்ளாச்சி யுவகுரு கல்லுாரியில் நடந்தது. இதில், 10 கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.முன்னதாக, யுவகுரு கல்லுாரி முதல்வர் அகிலாண்டம் அனைவரையும் வரவேற்றார். கல்லுாரி தாளாளர் தங்கராஜ், கல்லுாரி உறுப்பினர் ஸ்ரீசங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து, குழு நடனம், தனிநபர் நடனம், ரீல்ஸ், நகம் அலங்காரம், மெகந்தி, விளம்பரம் தயாரித்தல், நகைச்சுவை உருவாக்கம், என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், எஸ்.என்.எம்.வி., கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்கள், குழு மற்றும் தனிநபர் நடனம் போட்டியில் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் மாணவி மதுமிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்