உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு, இன்றும், நாளையும் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, மே, 5ல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் முடிந்து விட்டது.ஏராளமான மாணவர்கள் விண்ணப்ப பதிவை தவற விட்டதாகவும், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இன்றும், நாளையும் நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.தேர்வு கட்டணத்தை, நாளை இரவு 11: 50 மணிக்குள் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்