சென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு
சென்னை: சென்னை பல்கலையில் முதுநிலை படிப்புக்கான சேர்க்கைக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.சென்னை பல்கலையின் மெரினா மற்றும் கிண்டி வளாகத்தில் செயல்படும் பல்வேறு துறைகளில், முதுநிலை படிப்புக்கான சேர்க்கை நடவடிக்கை துவங்கியுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று துவங்கிஉள்ளது.சென்னை பல்கலையின், www.unom.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.