உள்ளூர் செய்திகள்

பாலஸ்தீனத்தில் போர்: மாணவர்கள் போராட்டம்

வாஷிங்டன்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்தக் கோரி, அமெரிக்காவில் பல்கலைகளின் வளாகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேற்காசியாவில் உள்ள பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆறு மாதங்களாக போர் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமின்றி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என 35,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.இந்நிலையில், இஸ்ரேல் -- பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் கோரி, அமெரிக்காவில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில்இறங்கியுள்ளனர். பல்வேறு பல்கலை வளாகங்களில் கூடாரம் அமைத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அமெரிக்க பல்கலைகள் இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும். கூகுள், அமேசான், ஆகியவற்றின் நிதி இஸ்ரேலுக்கு செல்லக் கூடாது என, போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சில இடங்களில், இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.அட்லான்டாவில் உள்ள எம்ராய் பல்கலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்ணீர் புகைகுண்டுகள், ரப்பர் குண்டுகளை வீசி போலீசார் கலைத்தனர். பல்கலை வளாகத்தை விட்டு வெளியேற மறுத்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை குண்டுக்கட்டாக துாக்கி அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்