உள்ளூர் செய்திகள்

தொல்லியல் நுால்கள் தள்ளுபடியில் விற்பனை

சென்னை: மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள முக்கிய நுால்கள், 40 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார அதிகாரிகள் கூறியதாவது:மத்திய தொல்லியல் துறை பதிப்பித்துள்ள கல்வெட்டு வரிசை நுால்கள், அஜந்தா, எல்லோரா, தஞ்சை பெரியகோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட வரலாற்று நினைவுச் சின்னங்கள் குறித்த நுால்கள் விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மத்திய தொல்லியல் துறை அலுவலகம் மற்றும் செஞ்சி கோட்டை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள மத்திய தொல்லியல் துறை அலுவலகங்களில், தற்போது கையிருப்பில் உள்ள முக்கிய நுால்கள், 40 சதவீத தள்ளுபடியிலும், மாணவர்களுக்கு, 50 சதவீத தள்ளுபடி விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த சலுகை வரும் டிசம்பர் வரை இருக்கும். மேலும் தகவல்களுக்கு, 044 --- -2567 0396 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்