ஆலோசனை மையத்தில் குவியும் மாணவர்கள்
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை மையத்தில் உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் உயர் கல்வியில் சேர்வதில் உள்ள தங்களுக்கான சந்தேகங்கள் குறித்து வல்லுனர்கள் உடன் கேட்டு தெரிந்து ஆலோசனை உதவிகளை பெற்று வருகின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியது, 2024--25 கல்வியாண்டிற்கான உயர்கல்வி சேர இருக்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேர்வதில் தங்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டில் மாணவர்கள் ஆலோசனை கேட்கலாம்.மேலும் 80729 18467, 75985 10114, 88389 45343, 95970 69842 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் கேட்டுக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளது.