உள்ளூர் செய்திகள்

எஸ்.சி.எஸ்.வி.எம்.வி.,யில் ஓலைச்சுவடிகள் பராமரிப்பு மையம்

ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா (எஸ்.சி.எஸ்.வி.எம்.வி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால், எஸ்.சி.எஸ்.வி.எம்.வி., பல்கலைக்கழகம் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது. அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டு மதிப்பு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. டாடா கன்சல்டன்சி சர்வீஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்த கல்வி ஆண்டு முதல் பி.எஸ்சி.,- கம்ப்யூட்டர் சயின்ஸ் காக்னிட்டிவ் சிஸ்டம், பிகாம்.,-பிசினஸ் புராசஸ் சர்வீஸ், பி.இ.,-கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு பிசினஸ் சிஸ்டம்ஸ் ஆகிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.யு.ஜி.சி.,யால் இந்தியாவின் சிறந்த 10 பல்கலைகளில் ஒன்றாக இப்பல்கலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி.,யின் கூட்டு முயற்சியுடன் பழங்கால ஓலைச்சுவடிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் கருத்துக்களை அனைத்து மொழிகளிலும் டிஜிட்டல் ஆக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்