சட்டக்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி
சென்னை: சட்டக்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை உறுதி செய்தல்கடந்த மூன்று ஆண்டுகளில், சட்டக்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் சேர்வதை மேம்படுத்த, இந்திய பார் கவுன்சில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தங்கள் சட்டப் படிப்புகளுக்கு ஒப்புதல் கோரும் அனைத்து நிறுவனங்களும் அதற்கான தரங்களை நிரூபிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான வசதிகள், பார்வைக் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த அவ்வப்போது நடத்தப்படும் ஆய்வுகள் மூலம் இந்திய பார் கவுன்சில் கண்காணிக்கிறது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட பணிகளாஇ செய்யவும் தேவையான கட்டமைப்பு வசதிகள், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை வழங்க வழிவகை செய்யுமாறு அனைத்து சட்டக் கல்வி நிறுவனங்களையும் இந்திய பார் கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.இந்த தகவலை சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.