அரசு பள்ளியில் கலைத்திருவிழா
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியத்தில், 1 முதல், பிளஸ் 2 வரையிலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, கடந்த, 23 முதல் கலைத்திருவிழா போட்டி நடந்து வருகிறது.குறுவள மைய அளவிலான இப்போட்டி, வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம்பாளையம், உலகப்பம்பாளையம், இலுப்புலி, எலச்சிபாளையம், பெரியமணலி ஆகிய மேல்நிலை பள்ளிகளில் நடந்தது. இக்கலைத்திருவிழா போட்டி மூலம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள, 77 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1,186 மாணவர்கள் தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்தினர். வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, எலச்சிபாளையம் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தொடக்கநிலை, நடு-நிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டிருந்தனர்.