உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி பயில உதவித்தொகை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 முடித்து, கல்லுாரி படிப்புக்குள் நுழைவதற்கு வசதி, வாய்ப்பில்லாத மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க, கலெக்டர் ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த அடிப்படையில், திருப்பூர் மாவட்ட ரெட் கிராஸ் சார்பில், உயர் கல்வி பயில்வோருக்கு கல்வி உதவித்தொகையாக, 4 லட்சத்து 30 ஆயிரத்து 300 ரூபாய் நிதி வழங்கப்பட்டது.ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், திருப்பூர் ரெட்கிராஸ் சங்க செயலாளர் தாமோதரன், துணை சேர்மன் அருள்செல்வம், பொருளாளர் சுப்ரமணியம் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்