உள்ளூர் செய்திகள்

ஜி.எச்., ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும், பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது.தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 13,211 அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள் முதல் டிரைவர்கள் வரையிலான அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச் முதல், பயோமெட்ரிக் வருகை பதிவை கட்டாயமாக்க, மருத்துவ பணிகள் இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக, மாவட்டந்தோறும், ஐ.டி., ஒருங்கிணைப்பாளரை நியமித்து, முக்கிய தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அவரவர் மொபைல் போனில் பயோமெட்ரிக் ஆப்பை பதிவிறக்கம் செய்து, குறித்த நேரத்தில் பணிபுரியும் இடத்தில் தங்களது, பேஸ் ஐடி வாயிலாக, தினமும் வருகையை உறுதிப்படுத்த வேண்டும்.டாக்டர்கள் காலை 7:30 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். விடுப்பு, ஆப் சென்ட், பிற நிர்வாக பணி காரணமாக மருத்துவமனை வராத டாக்டர்கள் உள்ளிட்ட விபரங்களை, மருத்துவ பணிகள் இயக்குநருக்கு தினமும் காலை 8:00 மணிக்கு, அப்டேட் செய்ய வேண்டும். இந்த அறிக்கையை மருத்துவ பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்