முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை
சென்னை: தமிழக அரசு தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும், அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் முஸ்லிம்கள், மாலை 4:30 மணிக்கு, அலுவலகத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொடக்கக்கல்வி நிர்வாக இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம்கள், ரம்ஜான் நோன்பு இருக்கும் நாட்களில் அதாவது, வரும் 31ம் தேதி வரை, தினமும் மாலை 4:30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக, அலுவலக நேரத்தில், மாலை ஒரு மணி நேரத்துக்கு முன், வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.