உள்ளூர் செய்திகள்

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தில், கல்வராயன்மலை, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம் ஆகிய வட்டாரங்களில் 4 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி படிப்பான எம்.எஸ்., ஆபிஸ் 3 மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், கணினி பயன்பாடுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். சுய உதவிக்குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் குறைந்தது 5 வருட அனுபவம் இருக்க வேண்டும். அதே வட்டாரத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.இரு சக்கர வாகனம் உரிமம், நல்ல சாதனை பதிவை கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பங்களை இணை இயக்குனர், மாநில ஊரக வாழ்வதார இயக்கம், கிராம ஊராட்சி சேவை மையம், நிறைமதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்) கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 16 ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்