உள்ளூர் செய்திகள்

பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி: ஜாகிர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணகிரி ஜாகிர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதைப்பொருள் தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுதாராணி தலைமை வகித்து, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் எவ்வாறு எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், போதைப்பொருள் பொருட்கள் பயன்படுத்துவதால் உடல் நலம், மனநலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படும் தீமைகள், போதைப்பொருள் வைத்திருத்தல், பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை சட்டப்படி குற்றம் என்பதை விளக்கினார்.மேலும், மாணவர்கள் நல்ல ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டிய அவசியம். போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்களின் பங்கு மிக முக்கியம் என எடுத்துரைத்தார். உதவி தலைமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்