உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட சமூகநல அலுவலகம் இணைந்து வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் பெண்கள் சார்ந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். கல்லுாரி தமிழ் துறை தலைவர் மோட்ச ஆனந்தன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாதுரை, சிறப்பு சொற்பொழிவாளர் சத்யராஜ், பாலின நிபுணர்கள் செல்வி, காவியா மற்றும் மாணவி மகாசக்தி ஆகியோர் பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்த விளக்கவுரை வழங்கினர்.நிகழ்ச்சியில் கல்லுாரி அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாணவி நேத்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்