ராம்சன்ஸ் பள்ளி ஆண்டு விழா
நத்தம்: நத்தம் அருகே காட்டுவேலம்பட்டி ராம்சன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் தனபாலன், பாஸ்கரன், முதல்வர் எழில் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் தையல்நாயகி வரவேற்றார். முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்வி, விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு கேந்திரியா வித்யாலயா முன்னாள் துணை ஆணையர் ராஜேஸ்வரி பரிசு, கேடயம் வழங்கினார்.கேந்திரியா வித்யாலயா முதல்வர் முருகன், குட்டூர் சிவன் கோயில் நிர்வாகி மணிமாறன், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், மாரியப்பன் பங்கேற்றனர்.