சேது கல்லுாரியில் ஊக்கத்தொகை தேர்வு
மதுரை: காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லுாரியில் ஏப்., 11ல் பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு நடக்கவுள்ளது. ஒரு மணி நேரத்தில் 50 கொள்குறி வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பரிசு உண்டு.மாணவர்கள் www.sethumerittest.in அல்லது கல்லூரி இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும். அதே நாளில் பொறியியல் கல்வியின் முக்கியத்துவம் குறித்து துறைத் தலைவர்கள் பேசுகின்றனர். தொடர்புக்கு: 94437 67007.