உள்ளூர் செய்திகள்

விடுதி மாணவர்களுக்கு நவீன உபகரணங்கள்

ராமநாதபுரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டில் செயல்படும் 28 விளையாட்டு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் போட்டிகளின் போது பயன்படுத்தும் வகையில் நவீன பிசியோதெரபி, மசாஜ் கன், ஐஸ் மேக்கிங் மிஷின் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2026 -27ம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை தேர்வு மே 7ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 28 விளையாட்டு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்காக ஒவ்வொரு விடுதிக்கும் புதிதாக நவீன பிசியோதெரபி, மசாஜ் கன் கருவிகள், ஐஸ் மேக்கிங் மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளன.மசாஜ் கன் கையடக்க சாதனம் தசைகளைச் சூடேற்றுவதாகவும், ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாகவும், தசை வலியை குறைப்பதற்கும் உதவுகிறது. பிசியோதெரபி கருவி ரத்தக்கட்டு, தசைப்பிடிப்புகளை சரி செய்கிறது. கையில் எடுத்துச் செல்லும் வகையில் ஐஸ் மேக்கிங் மிஷின் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மாவட்ட விளையாட்டு விடுதி பொறுப்பாளர்களுக்கு (டி.எஸ்.ஓ.,) பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. போட்டிகளின் போது பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இந்த உபகரணங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்