தோட்டக்கலையில் டிப்ளமோ விண்ணப்பிக்க அழைப்பு
கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையுடன் இணைக்கப்பட்ட, தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில், 2026 - 27ம் கல்வியாண்டுக்கான தோட்டக்கலை டிப்ளமோ (ஆங்கில வழி) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.பிளஸ் 2வில் தாவரவியல், விலங்கியல் அல்லது வேதியியல், உயிரியல் அல்லது வேளாண் தொழிற்கல்வி பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் https://tnau.ucanapply.com என்ற தளத்தின் வாயிலாக வரும் ஜூன் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மாணவர்கள், பல்கலை தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கவுன்சிலிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழக அரசின் பிரிவு வாரியான இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்.இத்தகவலை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வெளியிட்டுள்ளது.