உள்ளூர் செய்திகள்

எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் முத்துமணி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசுகையில், “போதை பழக்கம் தனி நபரின் உடல், மனம் மற்றும் சமூக வாழ்வை பெரிதும் பாதிக்கும். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதை தடுக்க அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு டி.எஸ்.பி., கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமை, தண்டனை குறித்து விளக்கி பேசினர். 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதியமான் கல்வி நிறுவனங்களின் முதன்மை பாதுகாப்பு அலுவலர் சுதாகர், வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்