அரசுப்பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
புதுச்சத்திரம்: கட்டுரை போட்டியில் வென்ற அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியை கலெக்டர் பாராட்டினார்.புதுச்சத்திரம் அடுத்த பூவாலை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ரேஷ்மா, கூட்டுறவு வார விழாவையொட்டி, கடலுாரில் நடந்த கட்டுரை போட்டியில், இரண்டாம் இடம் பிடித்தார்.இதையடுத்து அந்த மாணவிக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். பரிசு பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.