உள்ளூர் செய்திகள்

எழுத்தாளர்களுக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்த எழுத்தாளர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்படுத்தப்படும் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில் 11 நபர்களின் படைப்புகள் தேர்வு செய்து படைப்பினை வெளியிட உதவி தொகை வழங்கப்படுகிறது.இதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 9 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரச்னைகளை பற்றி எழுதும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர் என 11 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.இதனை ஊக்குவிக்கும் வகையில் இவர்களது சிறந்த இலக்கிய படைப்பினை வெளியிட தலா ஒரு லட்சம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை. கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும் இருக்கலாம். இருப்பினும் தமிழ் மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும்.பிற மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்கலாம். எம்.பில்., பி.எச்.டி., போன்ற படிப்புகளுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு அவை அரிதான சிறப்புடையதாக இருக்க வேண்டும். படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்ட படைப்புகளை கொண்டு விண்ணப்பிக்க கூடாது.ஒருமுறை விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பின்பே விண்ணப்பிக்க வேண்டும். படைப்புகளை தேர்ந்தெடுத்தல் குறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழுவின் முடிவே இறுதியானது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்திலும், ஆதிதிராவிடர் நல ஆணையகரத்திலும் வேலை நாட்களில் பெற்று கொள்ளலாம். மேலும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் முறையிலும், உரிய படிவத்தில் தவறாமல் மொபைல் எண்ணினை குறிப்பிட்டு உரிய காலத்திற்குள் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்