உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவம் தரவரிசை வெளியீடு

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 2026 - 27ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை, தலைமைச் செயலகத்தில், கால்நடைத் துறை அமைச்சர் கமலி நேற்று வெளியிட்டார்.தரவரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டன . தகுதி பெற்ற விண்ணப்பதாரர் பட்டியலை, பல்கலை இணையதளத்தில் காணலாம்.சந்தேகங்களுக்கு, 044 - 29997349 அல்லது 044 - 29997348 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது admission@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்