மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
குள்ளஞ்சாவடி: பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் ஜீவா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது.இதில் போக்குவரத்து கழக ஊழியர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது, 18 வயது முடியும் முன் இருசக்கர வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பது, பஸ் படிகளில் பயணம் செய்வதை தவிர்ப்பது, பஸ் பயணத்தின் போது தலை, கை வெளியே நீட்டாமல் பயணிப்பது, ஓடும் பஸ்சில் ஏறவோ, இறங்காமல் இருப்பது, பெற்றோர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிய அறிவுறுத்துவது, 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் ஓட்டுநர் உரிமம் பெற்று, தலைக்கவசம் அணிந்து, இரு சக்கர வாகனத்தை விதிகளின்படி இயக்குவது உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பயிற்சி மற்றும் விபத்து பிரிவு உதவி பொறியாளர் மற்றும் போக்குவரத்து கழக டிரைவர்கள், நடத்துனர்கள் பங்கேற்றனர்.