உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஊத்தங்கரை வட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பாக, போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் கணேசன், யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை சார்பு நீதிமன்ற நீதிபதி திருஞானசம்பந்தம் போக்சோ சட்டம் தொடர்பான பல்வேறு தகவல்களை திருக்குறள் எடுத்துக்காட்டுடன் மாணவர்களுக்கு விளக்கினார். போக்சோ சட்டம் உருவான விதம், சட்டத்திலுள்ள பாதுகாப்புகள், சைபர் கிரைம், தொலைபேசி எண்கள் குறித்து எஸ்.ஐ., ராஜ சங்கிலி கருப்பன், வழக்கறிஞர்கள் பிரபாவதி, வஜ்ஜிரவேல் ஆகியோர் எடுத்துரைத்தனர். இதில், எஸ்.ஐ., ஜெயகாந்தன், வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவை சார்ந்த பிரியதர்சினி, சிவசெல்வம், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் போக்சோ சட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்