உள்ளூர் செய்திகள்

கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நிதியுதவியுடன், ஆறு நாட்களுக்கு ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி திட்டம், வரும், 23 முதல், 28ம் தேதி வரை நடக்கிறது.கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்புக்கான, 'ஜெனரேட்டிவ் ஏஐ' மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தேசிய கல்வி கொள்கை, நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் கற்பித்தல் மேம்பாட்டை ஒருங்கிணத்தல் என்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில், 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். நிபுணர்களின் உரைகள், செய்முறை பயிற்சிகள், ஆராய்ச்சி சார்ந்த கலந்துரையாடல்கள் வாயிலாக, கற்பித்தல், ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்