ஹிந்துஸ்தான் பள்ளி விளையாட்டு விழா
கோவை: வீரம், விவேகம், உற்சாகம், விளையாட்டுத் திறன் ஆகியவற்றின் சங்கமமாக, ஹிந்துஸ்தான் சர்வதேசப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பரமசிவம் சிறப்பு விருந்தினராக பாங்கேற்றார். ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயல் செயலாளர் பிரியா, ஹிந்துஸ்தான் பள்ளியின் முதல்வர் சுஜா நாயர், ஹிந்துஸ்தான் மேட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் செண்பகவள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நான்கு இல்ல மாணவர்களின் கம்பீர அணிவகுப்பு, விளையாட்டு உறுதிமொழி, தீபம் ஏற்றலுடன் விழா தொடங்கியது. ஓட்டம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் போட்டிகள், முன்பருவக் கல்வி மாணவர்களின் வேடிக்கைப் போட்டிகள் நடந்தன.சிறப்பு விருந்தினர் பரமசிவம், மாணவர்களின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு, சுறுசுறுப்பைப் பாராட்டினார். விளையாட்டு என்பது பதக்கங்களையும், வெற்றிகளையும் பெறுவதற்கான ஒரு களம் மட்டுமல்ல; அது நற்பண்பு, மனவலிமை, தலைமைத்துவம், விடாமுயற்சி ஆகியவற்றை வளர்க்கும் சிறந்த தளம், என்று சுட்டிக் காட்டினார். பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.