உள்ளூர் செய்திகள்

இலவச பயிற்சிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி: பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி வளாகத்தில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் நபார்டு வங்கியுடன் இணைந்து பெண்களுக்கான பழங்கள், காய்கறிகள் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி, உலர் பழங்கள், காய்கறிகள் தயாரித்தல், முருங்கை மதிப்பு கூட்டுதல் பொருட்ள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் 15 நாட்கள் வழங்கப்பட உள்ளது.பயிற்சி வகுப்புகள் டிச., முதல் வாரத்தில் துவங்குகிறது. பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள பெண்கள் 63791 40583 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம், பயிற்சி தொடர்பான விவரங்களையும் கேட்டுக்கொள்ளலாம் என தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக சி.இ.ஓ., வசந்த் செல்வன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்