தமிழ் வழியில் புரோகிதப் படிப்பு
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ்ப் பேராயம், புரோகிதத் துறையில் ஓர் ஆண்டு (2 பருவம்) பட்டயப் படிப்பை தமிழ் வழியில் தொடங்குகிறது. பாடத்திட்டம் - திருமணம், புதுமனை புகுவிழா முதலான இல்லச்சடங்குகள், கோயில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு சடங்குகள். இப்பட்டயப் படிப்பில் சேர்வதற்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. ஒரு பருவத்திற்கு ரூ.300 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம் இருமுறை சனி-ஞாயிறு கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் 18-01-2011. விண்ணப்பங்களை வலைத்தளத்திலோ அல்லது நேரிலோ பெறலாம். வகுப்புகள் 22-01-2011 முதல் தொடங்குகின்றன. இதைப்பற்றி மேலும் விரிவான விவரங்கள் அறிய www.srmuniv.ac.in அல்லது www.dheivamurasu.org என்ற வலைதளங்களுக்கு செல்லவும்.