உள்ளூர் செய்திகள்

இக்னோவின் புதிய ஆன்லைன் பயிற்சி

கல்வி தொடர்பாக தொடர்ந்து பல புதுமையான முயற்சிகளை நடைமுறைப்படுத்தும் இக்னோ ஆசிரியர்களுக்கான புதிய கொள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒன்றை ஆன்லைனில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் அசைன்மென்ட், படிப்புத் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கு உதவிட புதிய தொழில்நுட்பப் பயன்பாட்டு முறை ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி தரப்படும். ACT (Academic Counselor's Training Online) என இந்தப் பயிற்சி அழைக்கப்படும். இந்தப் பயிற்சியானது தொலை தூரக் கல்வியை நடத்திடும் ஆசிரியர்களுக்கானது. தொலை தூரக் கல்வியை நேரடிக் கல்விக்கு மாற்றாக மட்டும் கருதி நடத்தும் மனப்பாங்கை மாற்றி, அதன் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இது றிமுகப்படுத்தப்படுவதாக இக்னோ தெரிவித்துள்ளது. நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டால் கல்வியில் பல மேன்மையான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதால் இக்னோ இந்த புதிய பயிற்சியை ஆன்லைனில் தரவிருப்பதாக பல்கலைக்கழக செய்திக் குறிப்பு கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்