உள்ளூர் செய்திகள்

தேர்வு நெருங்குகிறது தேவை ஆரோக்கியம்

பத்து மற்றும் பிளஸ்2 படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத ஆயத்தமாகி வருகின்றனர். தேர்வு சமயத்தில் பல மாணவர்களுக்கு ஆரோக்கியமின்மை பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனால் மாணவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியம். பெற்றோர்களும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தில் போதிய கவனம் செலுத்த வேண்டும். கடைகளில் விற்கும் தரமற்ற உணவுகளை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. நள்ளிரவு வரை அதிகநேரம் கண்விழித்து படிப்பதை தவிர்த்துவிட்டு காலையில் விரைவாக எழுந்து படிக்கும் வழக்கத்தினை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்கள் வந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்