உள்ளூர் செய்திகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வகுப்புகள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தின் இறுதிச்சுற்று நேர்முக தொடர்பு வகுப்புகள் இன்றும், நாளையும் நடக்கிறது. இதுதொடர்பாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக இயக்குனர் (பொறுப்பு) கா.அ.மணிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் நெல்லை மையத்தில் கல்வியாண்டு இளங்கலை முதலாம் ஆண்டு, 2 மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், வருடாந்திர சேர்க்கை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கான இறுதிச் சுற்று நேர்முக தொடர்பு வகுப்புகள் நடக்கவுள்ளது. இந்த வகுப்புகள் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இளங்கலை பி.ஏ. (தமிழ், ஆங்கிலம், வரலாறு), பி.காம்., பி.லிட், பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.சி.ஏ. இடைச் சேர்க்கை, பி.எஸ்.சி கணிதம் மற்றும் பி.எல்.ஐ.எஸ்.சி. முதுகலை எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு, பி.ஜி.டி.சி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. இடைச்சேர்க்கை நடக்கிறது. தொடர்பு வகுப்புகளின் அட்டவணை அனைத்து மாணவர்களுக்கும் தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்