மாணவர்கள் தயாரித்த 1 லட்சம் விதை பந்துகள்
ஆவடி: ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனம் சார்பில், 1 லட்சம் விதை பந்துகள் உருவாக்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.விதை பந்து உருவாக்கும் முறை, மண்ணில் ஏற்படுத்தும் மாற்றங்கள், விதைகளை எவ்வாறு பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.தனியார் கல்லுாரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 1,000 தனியார் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று, விதை பந்துகளை உருவாக்கினர். அந்த விதை பந்துகளை, பருவமழைக்கு முன் வனப்பகுதிகளில் துாவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், 24 வகையான நாட்டு மரங்களின் விதைகளை, மாணவர்கள் சீர்வரிசையாக கொண்டு வந்தது அனைவரையும் கவர்ந்தது.