ஏ.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி சாதனை
சிதம்பரம்: சிதம்பரம் ஏ.ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.சிதம்பரம், அண்ணாமலை நகரில் உள்ள ஏ.ஆர்.ஜி., அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு பொது தேர்வில், தேர்வு எழுதிய 35 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவி தமிழிசை 492; மாணவர்கள் கார்த்திக் வர்ஷன் 470; பத்மேஷ் 464; ஆகிய மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். 400 மதிப்பெண்களுக்கு மேல் 9 மாணவர்கள் பெற்றுள்ளனர்.சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி முதல்வர் கீதா, செயலாளர் கணேசன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினர்.மேலும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என பள்ளி முதல்வர் கீதா தெரிவித்தார்.இதில் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.