காலதாமதமாக பள்ளிக்கு வந்த 12 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
வேலூர்: கால தாமதமாக பள்ளிக்கு வந்த 12 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்ய பரிந்துறை செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் அரசு தொடக்க, நடு நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வருவதில்லை என மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மல்லிகாவுக்கு புகார்கள் வந்தன. அவர் தலைமையில் கல்வி அதிகாரிகள் அதிரடி சோதனை நேற்று (நவ.,26) நடத்தினர். இதில், பள்ளிகளுக்கு காலதாமதமாக வந்த பத்து ஆசிரியர்கள், எந்த தகவலும் கொடுக்காமல் பணிக்கு வராத இரு ஆசிரியர்கள் உள்ளிட்ட 12 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தொடக்க கல்வி அலுவலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.