உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு பணியாளர் தேர்வு 124 பேர் ஆப்சென்ட்

காஞ்சிபுரம்: வேளாண் கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவுவங்கி, பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, கூட்டுறவு அச்சகங்கள், கூட்டுறவு ஒன்றியம் ஆகியவற்றில் காலியாக இருக்கும் இளநிலை உதவியாளர், உதவியாளர் ஆகிய காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன.இதையடுத்து, டிச., 24ம் தேதி எழுத்து தேர்வு எழுதுவதற்கு, டிச., 21ல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என, கூட்டுறவு துறை அறிவித்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் திருமலை பொறியியல் கல்லுாரி மற்றும் திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய இரு தேர்வு மையங்களில், நேற்று, 883 பேர் தேர்வு எழுதினர். இதில், 124 பேர் வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்