உள்ளூர் செய்திகள்

எண்ணும் எழுத்தும் திட்டத்துக்கான 15 வகை பாட புத்தகங்கள் வருகை

நாமக்கல் : எண்ணும் எழுத்தும் திட்டத்துக்கான, 15 வகையான பாடப்புத்தகங்கள், நாமக்கல் மாவட்டத்துக்கு தருவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 1, 2, 3ம் வகுப்புகளுக்கு, 2022-23ம் கல்வியாண்டில் இருந்து, எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும், 2024-25ம் கல்வியாண்டில், எண்ணும் எழுத்தும் திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், 1 முதல், 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம் கணித புத்தகமும், 4 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்புத்தகம் மாவட்டம் தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலகத்துக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான, எண்ணும் எழுத்தும் திட்ட பாடப்புத்தகம், தருவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறையினர் கூறியதாவது: எண்ணும் எழுத்தும் திட்டத்துக்காக, 15 வகையான பாடப்புத்தகம் தருவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில் செயல்படும், வட்டார வளையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு, வரும், 31க்குள் அனுப்பி வைக்கப்படும். பள்ளி துவங்கும் போது, அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்