கால்நடை மருத்துவ படிப்பு; 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில், அரசு கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு; உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இந்த படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இந்த படிப்புகளுக்கு, 2020 - -21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய, நாளை மாலை, 6:00 மணி கடைசி நாள்.இந்த படிப்புகளுக்கு, இதுவரை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அயல்நாட்டு வாழ் இந்திய மாணவர்கள் எனப்படும், என்.ஆர்.ஐ., மாணவர்கள் விண்ணப்பிக்க, வரும், 23ம் தேதி கடைசி நாள்.