கருணாநிதி நுாலகம் ஜூலை 15ல் திறக்க திட்டம்
சென்னை: மதுரையில் கருணாநிதி நுாற்றாண்டு விழா நுாலகத்தை ஜூலை 15ம் தேதி திறக்க அரசு முடிவு செய்துள்ளது.மதுரையில் 2.70 ஏக்கரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட நுாலகத்தை அரசு கட்டியுள்ளது. இதற்கு கருணாநிதி நுாற்றாண்டு விழா நுாலகம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நுாலகத்திற்கு 10 கோடி ரூபாயில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. மின்னணு நுாலகமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நுாலகத்தை ஜூலை 15ம் தேதி திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு சிறப்பு அதிகாரி விஸ்வநாத் உள்ளிட்டோர் மதுரைக்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.