உள்ளூர் செய்திகள்

திருவள்ளுவர் ஓவியப்போட்டி 150 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

நாமக்கல்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து, 25 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி, நாமக்கல் மாவட்ட மைய நுாலக வாசகர் வட்டம் மற்றும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், திருவள்ளுவர் தொடர்பான ஓவிய போட்டி, நாமக்கல் மாநகராட்சி கோட்டை உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.அதில், 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட மைய நுாலகர் சக்திவேல் தலைமை வகித்தார். 3ம் நிலை நுாலகர் தங்கவேல், மைய நுாலக வாசகர் வட்ட தலைவரும், ஜவகர் சிறுவர் மன்ற இயக்குனர் தில்லை சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர்கள் வெங்கடேஷ், விஜயகுமார், சேகர், மகேந்திரன் மற்றும் ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள் ஓவிய போட்டிகளை நடத்தினர். சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, வரும், 23ல், மைய நுாலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும். மேலும் தேர்வு செய்-யப்படும் ஓவியங்களுக்கு பரிசும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்